இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையினை தரம் தாழ்த்தி வெளிப்படுத்தவே சிறிலங்கா அதிபர் விரும்புகிறார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கிடையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையில், இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத்தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இறுகப் பிணைக்கப்பட வேண்டும்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை கருத்தில் கொண்டு அரசியல் தீர்வானது ஈடுசெய்நீதியின் அடிப்படையில் அடிப்படையிலும், ஈழத்தமிழ் தெரிவு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அமையாத ஏற்பாடு எதுவும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையப் போவதில்லை.
அதிபரின் அறிவிப்பு சில மட்டங்களில் ஆரவாரங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளமையினை அவதானிக்க முடிவதோடு, இது கேலிக்கும் நகைப்புக்கும் உரியதோர் அறிவிப்பு என்பதனை அரசியல் புரிந்தோர் அனைவரும் அறிவர்” எனத் தெரிவித்துள்ளார்.