சுவிஸ்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை தமிழர்களான தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சுவிஸ் தகவல்கள் கூறுகின்றன.
விபத்தில் ஸ்தலத்தில் மகன் உயிரிழந்த நிலையில், தந்தை அவசர சிகிற்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , நேற்றையதினம் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
உள்நாட்டு போரால் உயிர் காக்க புலம்பெயர்ந்து சென்று அங்கு விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை சுவிஸ்சர்லாந்தில் கடும் குளிருடனான காலநிலை நிலவிவரும் நிலையில், மக்கள் தமது பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது