முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பொய்யர் என்று கூறிய வட கொரிய அமைச்சருக்கு அந்த நாட்டின் சர்வாதிகார ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளார்.
ஐ.நா பொதுச் சபை உரையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை “பொய் ராஜா” என்றும் “ஜனாதிபதி ஈவில்” என்றும் குறிப்பிட்டு இருந்த வட கொரிய அமைச்சர் ரி யோங் ஹோ-விற்கு ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணத் தண்டனை நிறைவேற்றியுள்ளார்.
ரி யோங்-ஹோ கடந்த 2003 முதல் 2007 வரை மேற்கு லண்டனின் ஈலிங்கில் உள்ள வட கொரியாவின் பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றினார். அதன்பின் 2016ம் ஆண்டு வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் இடையே சிங்கப்பூரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ரி யோங் முக்கிய பங்காற்றினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வையில் இருந்து ரி யோங் விலகி காணப்பட்ட நிலையில், அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்திய ரி யோங் ஹோ-வுக்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணத் தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
ரி யோங்-யின் வெளிப்படையான மரண தண்டனையை வட கொரியாவின் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தின் பாரிய விரிவாக்கத்துடன் இணைத்துள்ளது என ஜப்பான் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து தென் கொரிய எம்.பி யூன் குன்-யங், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆட்சியால் ரி யோங் சுத்திகரிப்பு செய்யப்பட்டதை நாட்டின் தேசிய புலனாய்வு சேவை (என்ஐஎஸ்) உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் தூக்கிலிடப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.