தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள பேரணியை வரவேற்றார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றதை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
தன்னைப் பொறுத்தவரை 1958 இல் சுதந்திர தின அணிவகுப்பு அணியில் இணைந்ததாக குறிப்பிட்டார். அதன் பின் இதுவரை சுதந்திர தினங்களில் கலந்தகொள்வதில்லை. ஏனெனில் தமிழர்களுக்கு சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை. இனியும் எமக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும் – என்றார்.

 
											 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													