News

தாய்லாந்தில் கோர விபத்து: 11 பேர் உடல் கருகி பலி

தாய்லாந்தில் சாலை தடுப்பு வேலியில் மோதி தீப்பிடித்ததால், வேனில் இருந்த 11 பேர் உடல் கருகி பலியாகினர்.

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் மாகாணத்துக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் இருந்தனர்.

கியாஸ் மூலம் இயங்கும் இந்த வேன் தலைநகர் பாங்காங் அருகே ஷி கியூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து வேனில் தீப்பிடித்தது. தீ பரவுவதற்கு முன்னால் 20 வயது இளைஞர் ஒருவர் மட்டும் வேனில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். சிறுவர்கள் உள்பட மற்ற 11 வெளியேற முடியாமல் வேனுக்குள் சிக்கினர். இதில் அவர்கள் 11 பேரும் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top