பாகிஸ்தானில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.
உலகம் முழுவதும் 2023 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு முதல் கலைகட்டியுள்ளன.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நேற்று இரவு முதல் பொதுஇடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் ஆங்கில புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். லாகூர், இஸ்லமாபாத், ராவுல்பெண்டி, கராச்சி உள்ளிட்ட நகரங்களில் சிலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.
அவ்வாறு வானத்தை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டை கொண்டாடியபோது பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேருக்கு குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.