ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்து கொள்ளவில்லை என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் நியாயமானது என நாம் நினைக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணொளியொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தான் இந்த மாநாட்டை கூட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சொல்லிக்கொண்டு திரிகிறார். அது நல்ல விடயம்.
ஆனால் தேசியம் என்றால் என்ன? அதில் மலையகம் இடம்பெறாதா? வடக்கு, கிழக்கு மட்டுமா?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், ஈழத்தமிழர்கள் சம்பந்தமாக தனிக்குவொன்றை அமைத்து பேசுங்கள், மலையக தமிழர்கள் தொடர்பாக தனிக்குழு அமைத்து பேசுங்கள், முஸ்லிம்கள் தொடர்பாக அவர்கள் விரும்பினால் இன்னுமொரு தனிக்குழு அமைத்து பேசுங்கள்.
இவற்றுக்கு உடன்பாடு கண்ட பின்னர் அனைவரையும் அழைத்து சர்வகட்சி மாநாட்டை நடத்துங்கள். இது தான் சரியான வழி என தெளிவாக கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.