இன்று (30.01.2023) இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிவாசலில் இன்று (30.01.2023) வழக்கம்போல தொழுகை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், திடீரென அங்கு பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது.
இதில் கிளர்ச்சியாளர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பள்ளிவாசல் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
⚡ Pakistan: Blast inside the Mosque near most secured Police Lines in Peshawar.
One side of the mosque has collapsed.
More than 50 injured. Death numbers not known yet. Emergency declared in nearby hospitals pic.twitter.com/F9VF5a3a4d
— Megh Updates 🚨™ (@MeghUpdates) January 30, 2023
அதேவேளை, கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் என பொலிஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு பள்ளிவாசலில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.