News

பிரான்சில் பரபரப்பான ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் 6 பேர் காயம் – அதிர்ச்சி சம்பவம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஹரெ டு நொர்ட் ரெயில் நிலையம் உள்ளது. இது பிரான்சின் மிகவும் பரபரப்பான ரெயில் நிலையம் ஆகும்.

இந்நிலையில், இந்த ரெயில் நிலையத்தில் இன்று காலை 6.45 மணியளவில் கூர்மையான கத்தியுடன் வந்த நபர் அங்கிருந்த பயணிகள் மீது தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து அலறியடித்து ஓடினர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் நடத்தியது யார்? தாக்குதலில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top