News

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு!

பிரான்ஸில் வீதியொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதில் இருவர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் பாரிசில் புறநகரான Suresnes (Hauts-de-Seine) இல் இடம்பெற்றுள்ளது. Avenue Edouard Vaillant வீதியில் திடீரென ஒன்றுகூடிய நான்கு இளைஞர்கள் சிலர் ஒருவரை பலமாக தாக்கிக்கொண்டனர்.

இந்த மோதலின் போது நால்வரில் ஒருவர் திடீரென துப்பாக்கி ஒன்றை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் 21 மற்றும் 28 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதேசமயம் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்ற நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top