News

போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் ராணுவ உதவியை அறிவித்துள்ள அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன் -ரஷியா இடையிலான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. சிறிய நாடான உக்ரைன் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க முக்கிய பங்காற்றி வருகிறது.

குறிப்பாக உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது உக்ரைனுக்கான மிகப்பெரிய ராணுவ உதவி என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. பென்டகனால் பின்னர் விவரிக்கப்படும் இந்த உதவியில் பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்கள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து பிராட்லீஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்து மார்டர்ஸ் ஆகிய கவச வாகனங்களை வழங்குவதாக வாஷிங்டன் மற்றும் பெர்லின் அறிவித்தன. ஆனால் விவரங்களை வழங்கவில்லை. இந்த வாரங்கத்திற்குள் சுமார் 40 மார்டர் வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்புவதாகவும், அதற்கான பயிற்சி ஜெர்மனியில் வழங்கப்படும் என்றும் பெர்லின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. .

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top