News

மாவீரர் துயிலும் இல்லத்தை ஆக்கிரமிக்கும் இராணுவம் – பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

 

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் இராணுத்தினரால் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதன் முத்தாய்ப்பாக துயிலும் இல்லத்தில் இராணுவ புலனாய்வாளர்களினால் திட்டமிடப்பட்ட வகையில் சில நடவடிக்கைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இதனைக் கண்டிக்கும் முகமாக நாளை மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு எதிராக மக்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் அதிகளவில் பங்கெடுக்க வேண்டும் என சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top