யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து வேலன் சுவாமிகள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அமெரிக்க காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா றோஸ் வன்மையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஆண்டு, வேலன் சுவாமிகள் அவர்களுடன் பேசுவதற்கும், இலங்கையில் தமிழர்களுக்கான சிவில் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அவர் ஆற்றிய பணிகளை அறிந்து கொள்வதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
கடந்த வாரம் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டமை குறித்து நான் மிகவும் கவலையடைந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
Last year, I had the opportunity to speak with Velan Swamigal and learn about his work on civil and human rights for Tamils in Sri Lanka.
I am deeply concerned by his arrest during a peaceful protest last week.
— Congresswoman Deborah Ross (@RepDeborahRoss) January 24, 2023
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை பரிந்துரைக்குமாறு அமெரிக்க வெளியுறவு செயலர் அன்டனி பிளிங்டனுக்கு இவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அத்துடன் ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகரிடமிருந்து இலங்கை தொடர்பான 2021 அறிக்கை.” ஹெச். ரெஸ் என்ற மைல்கல்லை அறிமுகப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அமெரிக்க காங்கிரஸில் 413 தீர்மானம் தமிழர் தாயகத்தை அங்கீகரித்து சர்வதேச பொறுப்புக்கூறலை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.