News

2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 40 பேர் பலி, மேலும் 87 பேர் படுகாயம்.

மேற்குஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு செனகல். இந்நாட்டின் கப்ரினி நகரில் நேற்று மாலை 2 நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 87 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

டயர் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்த பஸ் சாலையின் எதிரே வந்த மற்றொரு பஸ் மீது மோதி இந்த விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பஸ் விபத்தில் படுகாயமடைந்த பலரின் உடல்நிலை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top