News

710 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்! வீதிகளில் குவியும் சடலங்கள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய வீரர்கள் தொடர்பில் உக்ரைன் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தங்களுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக பாக்முட் நகரின் வீதிகளில் ரஷ்ய வீரர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உக்ரைனின் உப்பு சுரங்க நகரம் எனக் கூறப்படும் சோலேடார் நகரில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 10 மாத கால யுத்தத்தில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top