அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் இன்று (அந்நாட்டு நேரப்படி இரவு 10 மணி) துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 2 கட்டிடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பல்கலைக்கழகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.