News

அமெரிக்க C17 Globemaster விமானத்தில் ஆயுதங்களோடு கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விசேட அதிகாரிகள்!

2022ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றது, அதன் பின்னணியில் இருப்பது அமெரிக்கா என்பது எல்லோருக்கும் தெரியும் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆட்சிமாற்றத்தின்,  தொடர்ச்சியாகத்தான், அதாவது அந்த இடத்திற்கு யாரை கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்கா விரும்பியதோ அவரை கொண்டு வந்த பின்னரான தொடர் நடவடிக்கைகளைத் தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம்.

அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு துணை உதவிச் செயலாளர் தலைமையிலான, ஏறத்தாள இருபது பேர் படைத்துறை அதிகாரிகள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட ஏறத்தாள இருபது பேரை ஏற்றியவாறு C17 Globemaster ரக விமானம் திடீரென்று இலங்கையை வந்தடைந்தது.

அவர்கள் ஆயுதங்களுடன் தான் வந்தார்கள்.  இலங்கையிலும் அவர்கள் பாதுகாப்பு செயலாளருடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top