News

உக்ரைன் போரால் ஜேர்மனிக்கு 160 பில்லியன் யூரோக்கள் இழப்பு?

உக்ரைன் போர் ஜேர்மனிக்கு சுமார் 160 பில்லியன் யூரோக்கள் இழப்பை ஏற்படுத்தும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஜேர்மன் தொழில்துறை, 2021ஐவிட 2023இல் ஆற்றலுக்காக 40 சதவிகிதம் அதிகம் செலவிட உள்ளது என தொழில்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, உக்ரைன் போர் உருவாக்கிய பிரச்சினைகள் இந்த இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

தனக்கென சொந்தமாக எரிவாயு வைத்திருக்கும் அமெரிக்காவையும், அணு ஆற்றல் வைத்திருக்கும் பிரான்சையும் ஒப்பிடும்போது, எரிவாயுவுக்காக ரஷ்யாவை சார்ந்திருந்த ஜேர்மனி, ஆற்றலுக்காக அதிகம் செலவிடவேண்டியுள்ளது.

ஜேர்மனியில் எரிவாயுவின் விலை அமெரிக்காவைவிட மூன்று முதல் ஐந்து மடங்கும், பிரான்சைவிட நான்கு மடங்கும் உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் தொழில்துறை நிபுணர்கள்.

ஆக, உக்ரைன் போரால் ஜேர்மனிக்கு சுமார் 160 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும் என தொழில்துறை நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top