News

உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்! இரண்டாக பிளந்த பூமி :வைரலாகும் காணொளி

 

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமி இரண்டாக பிளந்துள்ளது.

கடந்த வாரம் துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இன்று வரை மீட்பு பணிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

இந்நிலையில், துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமி இரண்டாக பிளந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 100 அடி ஆழமும் 650 அடி அகலமும் கொண்ட மாபெரும் பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top