கனடாவில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் Waterloo பொலிசார் கூறுகையில், கடந்த 2ஆம் திகதி ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த நான்கு பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பிறகு காரை திருடி கொண்டு சென்றுவிட்டனர்.
காரில் இருந்த ஓட்டுனர் மற்றும் இளம்பெண்ணை கீழே இறக்கிவிட்டு காரை திருடியுள்ளனர். இதில் சம்மந்தப்பட்ட நபர் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டார். பிறகு அடுத்த சில நாட்களில் பதுங்கியிருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
நான்காவதாக இருந்த குற்றவாளியின் வயது 28ல் இருந்து 32க்குள் இருக்கலாம். அவர் தற்போது ரொறன்ரோவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.