ஹைதியில் நிலவும் நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜமைக்கா பிரதமருடன் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்தார்.
கரீபியன் நாடான ஹைதியில் அரசியல் கொந்தளிப்பு, ஊழல், ஆயுதமேந்திய குழுக்கள் கொலை, கற்பழிப்பு, கடத்தல் மற்றும் இடைவிடாத வன்முறை என சட்ட ஒழுங்கு சீரற்றுள்ளது. இதனால் அந்நாடு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
ஹைதியின் நிலைமையை விவாதிக்க சிறப்பு கரீபியன் சமூக பணிக்குழு ஒன்று கூடுகிறது. இதில் ஜமைக்கா உட்பட பஹாமாஸ், டிரினிடாட், டொபாகோ மற்றும் CARICOM செயலகத்தின் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த குழுவிற்கு ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரு ஹோல்னஸ் தலைமை தாங்கினார்.
இதற்கிடையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜமைக்கா பிரதமருடன் ஹைதி குறித்து விவாதித்துள்ளார். கரீபியன் சமூகத்தின் முக்கிய பங்கு உட்பட, ஹைதியில் நிலவும் நெருக்கடி குறித்து விவாதித்த பிரதமர்கள், அது எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு ஹைதி தலைமையிலான தீர்வுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
அதேபோல், ஹைதி மக்களின் தேவைகளை நன்கு புரிந்துகொள்வதற்கான வழிமுறையாகவும், எவ்வாறு சிறந்த ஆதரவை வழங்குவது என்றும், பரந்த அளவிலான ஹைதிய பங்குதாரர்களுடன் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை இருவரும் பரிமாறிக் கொண்டனர். இறுதியில், இரு நாட்டு தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ, ‘நேற்று பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ்வுடன் பேசினேன். ஹைதியின் நிலைமை, நிலத்தில் வெளிவரும் நிகழ்வுகள் மற்றும் இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஹைதி மக்களுக்கு நமது நாடுகள் வழங்கக்கூடிய ஆதரவு குறித்து நாங்கள் கவனம் செலுத்தினோம். இதில், நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்’ என தெரிவித்துள்ளார்.