பிரித்தானியாவில் மில்டன் கெய்ன்ஸ் பகுதியில் விஜயம் செய்த மன்னர் சார்லஸ், ராஜ குடும்பத்திற்கு எதிரான மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னர் சார்லஸை வரவேற்க திரண்டிருந்த மக்கள் தேசிய கொடியை ஏந்தியிருந்தாலும், குறிப்பிட்ட சிலர், சார்லஸ் எங்கள் மன்னரல்ல என்ற வாசகத்துடன் பதாகைகளும் ஏந்தியிருந்தனர்.
மட்டுமின்றி, ராஜ குடும்ப முறைகளைகளை நாட்டில் விட்டொழிக்க வேண்டும் எனவும் சிலர் பதாகை ஏந்தியிருந்தனர். மன்னர் சார்லஸ் திரண்டிருந்த பொதுமக்கள் பக்கள் திரும்பிய நிலையில், கால்பந்து விளையாட்டின் போது தங்கள் அணிக்கு ஆதரவாக முழக்கமிடுவது போன்று திரண்டிருந்த கூட்டம் மன்னருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளது.
முடிசூட்டு விழா என்பது வீண் செலவு என குறிப்பிட்டுள்ள ஒருவர், இது தொடர்பில் மக்கள் விரிவான விவாதம் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பிரித்தானிய மக்கள் உண்மையாக பதிலளிக்க வெண்டும், அவர்கள் மன்னராக சார்லஸை தெரிவு செய்ய ஏற்கிறார்களா அல்லது அவர்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமா என ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில், ராஜ குடும்பத்திற்கு எதிரான மன நிலை உருவாகி வருகிறது. அதன் எதிர்காலம் குறித்து பிரித்தானிய பொது சமூகம் விரிவான விவாதம் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மே 6ம் திகதி முன்னெடுக்கப்படும் முடிசூட்டு விழாவின் போது கண்டிப்பாக ஆர்ப்பாட்டங்கள் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.