News

ஜனநாயகத்தை இல்லாமல் செய்கின்ற பணிகளில் ரணில் ஈடுபடுகின்றார்: எஸ்.சிறீதரன்

கட்சி மற்றும் பதவிகளை தக்க வைப்பது தொடர்பிலே பல வியூகங்களை ரணில் விக்ரமசிங்க வகுக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து, ஜனநாயக ஆட்சி முறையை இல்லாது செய்வதிலும், ஜனநாயகம் என்பதற்கு பல விளங்கங்களை சொல்லியும் போராட்டங்களை முன்னெடுத்த நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது ஓர் துர்ப்பாக்கியம்.

அவரை ஒரு லிபரல்வாதி என்றுதான் பலர் வெளி உலகிலே கூறுவார்கள்.

அந்த லிபரல் தன்மை கொண்டவர், இன்று ஜனநாயகத்தை மதிக்காத அல்லது ஜனநாயக முறைகளை ஏற்றுக் கொள்ளாதவராக  நாட்டிலே காணப்படுகிறார்.

அந்த நாட்டினுடைய மக்கள் தங்களுடைய சுயமான பொருளாதார அரசியல் முறைகளை சரியாக வழிநடத்துகின்றார்கள் என்றால், நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றது என்று அர்த்தம்.

ஆனால் ஜனநாயகம் இந்த நாட்டிலே இல்லை. அந்த ஜனநாயககத்தை இல்லாது செய்கின்ற பணிகளில் மிகப்பெரிய அளவிலே ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவரோடு சேர்ந்த பலரும் அதற்காக உழைக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top