தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நேற்றைய தினம் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் இன்னும் இரண்டு மாதங்களில் காலம் முடிந்து விடுதலையாக இருந்தவர்.
மற்றைய ஒருவர் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அது ரத்து செய்யப்பட்ட பின்னரே சிறையில் இருந்து விடுவிக்கபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட எஸ். கிருபாகரன், வி.றொபின்சன் மற்றும் செல்லையா சதீஸ்குமார் ஆகியோரே பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மகஸில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொது மன்னிப்பில் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கிருபாகரனின் தண்டணைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
அதேவேளை, பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ள செல்லையா சதீஸ் குமார் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மேன்முறையீடு செய்துள்ளதால் அவர் அதை மீளப்பெறும் வரையில் சிறையில் தடுத்து வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.