News

துபாயில் அனாதையாக வீதியில் உயிரிழந்து கிடந்த தமிழர்! முகம் தெரியாத உறவுகள் செய்த நெகிழ்ச்சியான செயல்

துபாயில் 28 நாட்களாக அனாதையாக வீதியில் உயிரிழந்து கிடந்த தமிழர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – தேனி மாவட்டத்தினை சேர்ந்த 38 வயதான காமராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடும் வறுமை காரணமாக சுற்றுலா வீசா மூலம் துபாய் சென்ற இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வீதியில் அனாதையாக உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரின் உடலை மீட்ட துபாய் பொலிஸார் இவர் தொடர்பிலான தகவல் தெரியாமல் குழம்பியுள்னர்.

40 நாட்களின் பின்னர் இவரின் கடவுச்சீட்டு கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் அதனை ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டு உயிரிழந்தவரின் விபரங்களை திரட்டி தருமாறு உதவிகோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து முகம் தெரியாத பல முகநூல் உறவுகளின் உதவியுடன் நீண்ட போராட்டத்தின் பின்னர் உடலினை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top