News

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 278- மணி நேரம் கழித்து உயிருடன் ஒருவர் மீட்பு

துருக்கி நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆயிரம் ஆனது. நிலநடுக்கம் ஏற்பட்டு 278 மணி நேரம் கடந்துள்ள நிலையில் இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

துருக்கி நாட்டில் கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட நில நடுக்கம் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. அதன் அண்டை நாடான சிரியாவும் இந்த நில நடுக்கத்தால் பெரும்பாதிப்புக்கு ஆளானது. இவ்விரு நாடுகளிலும் பல மாடி கட்டிடங்கள் பல்லாயிரக்கணக்கில் இடிந்து தரை மட்டமாகின.

இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களையும், உயிரோடு இருப்பவர்களையும் தேடும் பணி இன்னும் தொடர்கிறது. துருக்கியில் நில நடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்து விட்டது.

துருக்கியில் 12 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளுக்குள் இருந்து 45-வயதான நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது மீட்புக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக நேற்று 12-வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு இருந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top