துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் உருக்குலைந்தன. கட்டிடங்கள் இடிந்து பல ஆயிரக்கணக்கான உயிர்சேதத்தை ஏற்படுத்தியது.
தற்போது மீட்பு பணிகள் முடிந்து புனரமைக்கும் பணிகள் துருக்கியில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்ட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.