News

துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேர் 204 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்பு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

துருக்கி, உலகை உலுக்கிய துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் நிலநடுக்க பேரழிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,000ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வடமேற்கு சிரியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு 204 மணி நேரத்திற்குப் பிறகு தெற்கு நகரமான ஹடேயில் இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணும் ஆணும் மீட்கப்பட்டதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டு 198 மணி நேரத்திற்குப் பிறகு தெற்கு துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 18 வயது முஹம்மது கபர் மீட்கப்பட்டார். சிறிது நேரத்திற்கு முன்பு, அண்டை மாநிலமான கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் இருந்து இரண்டு சகோதரர்களை மீட்புப் பணியாளர்கள் உயிருடன் மீட்டனர். துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் பேரழிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,000ஐ தாண்டியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top