தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் உள்ள வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
விபத்தின்போது பேருந்து தனிவழிப்பாதை ஒன்றின் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் வீழ்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.