News

தேர்தலை நிறுத்த பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் ஜனாதிபதியே! – சஜித் குற்றச்சாட்டு

நாட்டில் ஜனநாயகத்தைச் சீர்குலைத்து தேர்தலை நிறுத்துவதற்குப் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதியே என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரத்தனமாகப் பேசுகின்றார். தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் அவர் நடந்து கொள்கின்றார்.

தேர்தல் இல்லை என்றால், இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதியும் அறிவிக்கப்பட்டு, தேர்தலை நடத்தும் திகதியும் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாகப் பேசி கிறுக்குத்தனமாக நடந்துகொள்கின்றார்.

இந்த நாட்டில் ஜனநாயகத்தைச் சீர்குலைத்து தேர்தலை நிறுத்துவதற்குப் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதியே என்றும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top