News

நியூஸிலாந்தின் வடக்குப் பகுதியில் முன்னெச்சரிக்கையாக அவசர நிலை பிரகடனம்!

நாட்டின் சில பகுதிகள் தீவிர வானிலைக்கு தயாராகி வருவதால், நியூஸிலாந்தின் வடக்குப் பகுதியில் முன்னெச்சரிக்கையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது,

நார்த்லேண்டில் உள்ள அவசர சேவை பணியாளர்கள், செவ்வாய் முதல் புதன்கிழமை வரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

ஆக்லாந்து நகரம் வெள்ளிக்கிழமை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கைகள் வந்துள்ளன.
இதுவரை இந்த வெள்ளத்தால், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

மோசமான வானிலை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பை சரிசெய்வதற்கு வீதிகளை தெளிவாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை முன்னிட்டு ஆக்லாந்து பாடசாலைகளில் பெப்ரவரி 7ஆம் திகதி வரை வருகை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் தரையிறக்கப்பட்ட பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கும் ஆக்லாந்து விமான நிலையத்தில், அதிக வெள்ளம் ஏற்படுவதற்குத் தயாராக மணல் மூட்டைகள் மற்றும் குழாய்கள் தயாராக உள்ளன.

வெள்ளிக்கிழமை பெய்த மழையினால் ஏற்பட்ட பெரிய சறுக்கல்களால் ஆக்லாந்திற்கு வடக்கே உள்ள சில முக்கிய மோட்டார் பாதைகளின் சில பகுதிகள் மூடப்பட்டுள்ளன, மேலும் புதியவை இப்போது வீதிகளைத் தடுப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நார்த்லேண்ட் சிவப்பு வானிலை எச்சரிக்கைக்கு உட்பட்டது இதுவே முதல் முறை, இதுவே நியூஸிலாந்தின் மிக உயர்ந்த எச்சரிக்கை. பிராந்தியத்தின் சில பகுதிகளில் 200 மிமீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்பவர்கள் தேவைப்பட்டால் வெளியேற தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்குத் தீவின் ஏனைய பகுதிகளிலும் தெற்குத் தீவின் கீழ் பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், தனது நாடு நியூசிலாந்திற்கு தேவையான ஆதரவை வழங்க தயாராக உள்ளது என்று கூறினார். அதற்கு பதிலளித்த நாட்டின் புதிய பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், உதவி முற்றிலும் பொருத்தமாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top