News

நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் வடக்கு கட்சினா மாநிலத்தில், நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக நடந்த சமீபத்திய வன்முறையில் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நடந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உள்நாட்டில் கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்படும் ஆயுதமேந்திய கும்பல், கட்சினாவின் பகோரி உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைத் தாக்கியதாக கட்சினா மாநில பொலிஸ்துறை செய்தித் தொடர்பாளர் காம்போ இசா தெரிவித்தார்.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவரும் நோக்கில் தற்போது ஒரு கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
ஆயுதமேந்திய கும்பல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வட மாநிலங்களில் கட்சினாவும் ஒன்றாகும்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பெப்ரவரி 25ஆம் திகதி மக்கள் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top