News

பாலஸ்தீனத்துடன் பதட்டம் அதிகரிப்பு காசாமுனை பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

இஸ்ரேல் போர் விமானங்கள் மத்திய காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டம் தொடர்கிறது. ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும் பாலஸ் தீனத்தில் உள்ள காசா முனை பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே இஸ்ரேல் வசம் உள்ள மேற்குகரை பகுதியில் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடியாக இஸ்ரேலில் மதவழிபாட்டுத்தலம் அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 7 இஸ்ரேலியர்கள் பலியானார்கள். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

இந்த ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா முனைபகுதியில் இன்று வான்வழி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் மத்திய காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின.

இந்நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் ராக்கெட்டுகளை ஏவினர். சில ராக்கெட்டுகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் வழிமறித்து அழித்தது. தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

இஸ்ரேலில் மத வழிபாட்டு தலம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் காசா முனை பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டம் தொடர்கிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top