News

பிரபாகரனால் அதிர்ந்த சிறிலங்கா நாடாளுமன்றம்

 

 

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மையப்படுத்தி காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் இந்த காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

வடமாகாண மக்களின் விவசாயம் உட்பட்ட வளங்களை சிறிலங்காவின் அரசாங்கங்கள் அழிக்கவில்லை. மாறாக விடுதலைப் புலிகளின் தலைவரே அனைத்தையும் அழித்ததாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட, சிறிதரன் அதற்கான பதிலை வழங்கியிருந்தார்.

அத்துடன் தமிழ் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் இனவாதங்களை கக்கி வரும் நிலையில், அரசாங்கம் தான் வடக்கிற்கு சென்று நல்லிணக்கத்தை உருவாக்க கடுமையாக பாடுபடுவதாகவும் விஜயதாச ராஜபக்ச கூறினார்.

இந்தக் கருத்துகளுக்கு பதிலடி வழங்கிய சிறிதரன், விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே தமிழர்களுக்கு தலைவர் என்றும், வாழ்நாள் முழுவதும் அவரை தாம் மறக்கப் போவதில்லை எனவும் ஏன் உங்களாலும் கூட அவரை மறக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top