பிரான்சில் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக இன்றும் பணிப்புறப்கணிப்பு மற்றும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
இன்று நடத்தபட்ட பேரணிகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவான மக்கள் கூடியிருந்தமை அதிபர் இமானுவல் மக்ரனின் அரசாங்கத்துக்குரிய எதிர்ப்பு வலுவடைவதை ஆதாரப்படுத்தியிருந்தது.
பிரான்சில் தற்பொது நடைமுறையில் உள்ள ஓய்வுபெறும் சட்டபூர்வ வயதான 62 ஐ 64 ஆன உயர்த்தும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த 19 ஆம் திகதி தேசிய அளவில் பணிப்புறக்கணிப்பு மற்றும் பேரணிகள் நடத்தப்பட்ட நிலையில் இன்றைய போராட்டங்களும் ஒப்பீட்டு அளவில் ஓரளவு வலுவாகவே இருந்தன.
19 ஆம் திகதி இடம்பெற்ற போரட்டங்களில் 1.12 மில்லியன் மக்கள் தேசியரீதியில் திரண்டிருந்த நிலையில் இன்று ஒரு மில்லியன் மக்கள் திரண்டிருந்தாக கூறப்பட்டுள்ளது.
தலைநகர் பரிசின் 13 ஆம் வட்டாரத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி இரவு 7 மணியளவில் 7 ஆம் வட்டாரத்தில் முடிவடைந்ததாக அறிவிக்கபட்டுள்ளது.
இன்றைய பணிப்புறக்கணிப்பு காரணமாக பரிஸ் உட்பட்ட நகரங்களின் போக்குவரத்து சேவைகளில் பெரும் இடையூறுகளை ஏற்பட்டிருந்தன.