News

பிரான்ஸ் பொலிஸாரால் தாக்கப்பட்டு கண்ணை இழந்த ஆர்ப்பாட்டக்காரர்: மிகப்பெரிய தொகை இழப்பீடு

 

2009ம் ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்டு ஒரு கண்ணை இழந்த ஆர்ப்பாட்டக்காரர் ஜோகிம் கட்டி-க்கு பிரான்ஸ் அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 8ம் திகதி மாண்ட்ரூயில் கட்டிடத்தின் முன் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் அகற்ற முற்பட்ட போது, ஜோகிம் பலத்த காயமடைந்தார்.

இந்நிலையில் ஜோகிம் (Joachim Gatti) தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2009 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரி ஒருவரால் ரப்பர் தோட்டாக்களால் சுடப்பட்டு கண்ணை இழந்த ஆர்ப்பாட்டக்காரர் ஜோகிம் கட்டி-க்கு  100,000 யூரோக்களுக்கு மேல் இழப்பீடு வழங்குமாறு பிரான்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பாரிஸுக்கு சற்று வெளியே Montreuil-ல் உள்ள நிர்வாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், கட்டியின் வழக்கறிஞர்கள் 5,00,000 யூரோக்களை மேல் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார், ஆனால் நீதிமன்றம் ஜோகிம் கட்டி-க்கு 105,350 யூரோக்கள் ($112,000) செலுத்துமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

காயத்தால் கேமராமேன் மற்றும் எடிட்டராக பணியாற்றி வந்த முந்தைய வேலையை ஜோகிம் கட்டி-யால் தொடர முடியவில்லை.

ஜோகிம்-க்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஒரு வகையான ரப்பர் புல்லட்டை சுட்டு தள்ளக்கூடியது.

இதற்கிடையில் ஜோகிமை தாக்கிய காவல்துறை அதிகாரி 2018ல் மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 18 மாத இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையைப் பெற்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top