பிரேசில் நாட்டில் உள்ள மடோ கிராஸோ மாநிலம் சினோப் நகரில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடைபெற்றது. அப்போது ஒரு நபர் மற்றொரு நபரிடம் தோல்வியடைந்து, 4000 ரியால் பணத்தை இழந்துள்ளார். வெளியே சென்ற அந்த நபர், மற்றொரு நபரை அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.
தன்னை தோற்கடித்த நபரை மீண்டும் விளையாட அழைத்துள்ளார். இந்த முறையும் அந்த நபர்கள் தோல்வி அடைந்தனர். அப்போது போட்டியை காண வந்திருந்த சிலர், தோல்வியடைந்தவர்களை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விளையாட்டில் தோல்வி அடைந்த நபர்கள், தங்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய எட்கர் ரிக்கார்டோ மற்றும் எசேக்கியாஸ் ரிபேரோ ஆகிய 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.