பிரேசில் நாட்டில் உள்ள சிறையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 கைதிகள் பலியாகினர்.
பிரேசில் நாட்டில் சாண்டா கேதரினா மாகாணத்தில் புளோரியன்போலிஸ் என்ற இடத்தில் உள்ள சிறையில் நேற்று முன்தினம் திடீரென தீ பிடித்தது.
இந்த தீ மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் பரவவிடாமல் தடுத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 3 கைதிகள் உயிரிழந்தனர். அவர்கள் தீ விபத்தினால் எழுந்த கரும்புகையை சுவாசித்ததால் இறந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் 43 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அந்தச் சிறையில் ஒரு அறையில் மெத்தையில் ஏற்பட்ட தீ தான் பரவியதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.