News

ராஜபக்க்ஷ தொழிற்சாலைகளில் கூலிவேலை செய்யும் தமிழர்கள் ! சர்வதேச நீதிகோரும் உறவுகள்

இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் ராஜபக்ச சகோதரர்களால் கைது செய்யப்பட்ட தங்களது உறவுகள், உகாண்டாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் குடும்ப ஆட்சி, இனப்படுகொலை ஆட்சி ஒழிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடுகின்றனர். ராஜபக்ச சகோதரர்களால் கைது செய்யப்பட்ட எங்களது உறவுகள் உகாண்டாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.

அங்கு ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான 11 தொழிற்சாலைகளில் ஊதியம் இல்லாத கூலிகளாக வேலைக்கு வைத்திருக்கிறார்களோ என சந்தேகிக்கிறோம்.

அந்த தொழிற்சாலைகளை ராஜபக்க்ஷ குடும்பத்துடன் மிக நெருக்கமனவரான வேலுப்பிள்ளை கனநாதன் என்பவரே நிர்வகித்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக உலகத் தமிழர்கள் ஆராய்ந்து அறிக்கை தர வேண்டுனெ வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை சர்வதேச விதிகளை மீறி ராஜபக்சக்களின் சிங்கள இராணுவம் இனப்படுகொலை செய்தது.

இந்நிலையில் 13 ஆண்டுகளாக சரணடைந்த எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட எங்களது உறவுகளுக்கு என்னதான் ஆனது என்பது இன்று வரை தெரியவில்லை.

இலங்கையில் நிகழ்ந்திருக்கும் ஆட்சி மாற்றம் எங்களுக்கு நீதியை பெற்றுத்தராது என கூறிய கலாரஞ்சினி, எனவே நாங்கள் சர்வதேச சமூகத்தின் ஊடாக நீதியை கோருவதாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top