News

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் குழப்ப வேண்டாம்! ச.வி.கிருபாகரன்

 

 

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் சந்தோசம்,இல்லாவிட்டால் பெரும் கவலை. ஆனால் தலைவர் இருப்பதாக தெரிவித்து குழப்பத்தினை ஏற்படுத்த வேண்டாம் என பிரான்ஸில் இருக்கும் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குநரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் வட்டாரத்தில் பெருபேசுபொருளாக மாறியுள்ளது.

போராட்டம் எவ்வாறு முடிவிற்கு வந்தது என்பதினை அனைவரும் அறியவேண்டும். உடன் இருந்தவர்களே காட்டிக்கொடுத்திருந்தனர்.இதன் அடிப்படையிலேயே போராட்டம் முடிவடைந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வெளியில் வந்து அனைவரிடமும் கதைக்க வேண்டுமென நினைப்பது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரின் குடும்பத்தினருடன் நான் தற்சமயம் தொடர்பில் இல்லை. ஆனால் அவர்களில் சிலரை நான் தற்செயலாக பொது வெளியில் கண்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top