News

ஸ்விட்சர்லாந்து பாராளுமன்றத்திற்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த நபர் கைது

 

சுவிட்சர்லாந்து பாராளுமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டுகளுடன் மர்ம நபர் புகுந்ததால், உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

புல்லட் புரூஃப் உடை அணிந்துகொண்டு காரில் வந்து இறங்கிய மர்ம நபர், பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

தெற்கு நுழைவு வாயிலில் அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் வைத்திருந்ததால் அவரை கைது செய்தனர். இதையடுத்து, பாராளுமன்றம் உள்ள பகுதியில் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டது.

பாராளுமன்றம் மற்றும் அருகில் உள்ள கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். குறிப்பாக காரைப் பரிசோதிக்க, ட்ரோன்கள் மற்றும் ஒரு மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது.

இந்த பரிசோதனையில், காரில் எந்த வெடிபொருளும் இல்லை என்பது உறுதி செயய்ப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top