13 ஆவது திருத்தச் சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
மேலும், 13 என்பது அரசமைப்பின் ஓர் அங்கமாகும். அதனை எதற்காக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவுக்குச் (Gotabaya Rajapaksa) சார்பான ஓரிரு பிக்குகளே 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர் என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.
13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பௌத்த பிக்குகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.