திருகோணமலை -மூதூர் – குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் நினைவு நாள் இன்று (11.02.2023) குமாரபுரம் மக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மனித படுகொலை நடந்து இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொடூர சம்பவம் (1996.02.11)ஆம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.
இந்நினைவு நாளை கிராம மக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் இளைஞர் இணைந்து அனுஸ்டித்திருந்தனர்.
இதன்போது உறவுகளை இழந்தவர்கள் கதறி அழுது இலங்கை அரசிடமும் சர்வதேசத்திடமும் தங்களுக்கான நீதியை கோரினார்கள்.