அமெரிக்காவின் நாஷ்வில்லேவில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.
நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் மூன்று மாணவர்களையும் மூன்று பெரியவர்களையும் கொன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரும் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நாஷ்வில் பகுதியைச் சேர்ந்த ஆட்ரி எலிசபெத் ஹேல் என்றும், அவர் ஒரு காலத்தில் அதே பள்ளியில் படித்தவர் என்றும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
முன்னதாக மழலையர் பள்ளி முதல் ஆறாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவர்கள் படிக்கும் பிரஸ்பைடிரியன் பள்ளியான தி கோவனன்ட் பள்ளியில் இந்த வன்முறை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு டெக்சாஸ், உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த படுகொலை உட்பட, நாடு முழுவதும் உள்ள சமூகங்கள் பள்ளி வன்முறைகளின் தொடர்ச்சியால் தத்தளித்து வரும் நிலையில் இந்த கொலைகள் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.