News

இனப்பிரச்சினை தீர்வுக்கு கூட்டுக்குழு – சிறிலங்காவுக்கு தொடரப்போகும் சவால்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளக ரீதியில் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் வழிமுறைகளை வகுக்க சிறிலங்கா – தென்னாபிரிக்க கூட்டு செயற்குழு ஒன்று நிறுவப்படவுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சிறப்பு பணிப்பின் அடிப்படையில், சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் கடந்த 4 நாட்களாக, தென்னாபிரிக்காவில் சுற்றிச்சுழன்று தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோச உட்பட்ட தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் அந்தப் பேச்சுக்களின் பெறுபேறுகளாக இந்தப் பொறிமுறை உருவாக்கப்படுகிறது.

சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டு அமைக்கப்படவுள்ள இந்தப் பொறிமுறை குறித்த கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று விரைவில் தென்னாபிரிக்காவுக்கும் – சிறிலங்காவுக்கும் இடையே கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்தப்பொறிமுறையைக் கொண்டு சிறிலங்கா விடயத்தில் மந்தமாக இயங்கும் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நகர்வுகளை முறியடித்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பாக, ஜெனிவா நகர்த்திவரும் போர்க்குற்ற சாட்சியப்படுத்தல்களை வலுவிழக்கச் செய்யலாம் என சிறிலங்கா அரசாங்கம் எண்ணிக்கொள்கிறது.

இதனால், தான் ஏற்கனவே ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்களை தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து வருவதுடன், உள்ளூரில் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்கி அதன்மூலம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கப்போவதான நகர்வுகளும் இடம்பெறுகின்றன.

இந்த விடயத்தை ஏற்கனவே கொழும்பு அதிகார மையம் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கும் அறிவித்திருந்தது. ஆனால், சிறிலங்காவின் இவ்வாறான தென்னாபிரிக்க பொறிமுறை சூட்சுமங்களின் இலக்குகள் எல்லாவற்றையும் ஊகித்துக்கொள்ளும் ஐ.நாவும் சிறிலங்கா விடயத்தை தானும் கைவிடுவதற்கு தயாரில்லை என்ற செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறது.

நேற்று ஐ.நா மனித உரிமைப் பேரவை வெளியிட்ட ஆவணமொன்றின் ஊடாக இது புலப்படுகின்றது. இது சிறிலங்காவுக்கு தொடரப்போகும் முக்கியமான சவால்.

இதேவேளை, எதிர்வரும் 2029ஆம் ஆண்டு வரை சிறிலங்காவின் கோவைகள் ஜெனிவாவில் தொடர்ந்தும் முக்கிய கண்காணிப்பிற்குள் உள்ளாக்கப்படும் என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top