News

இரண்டாக உடையும் முக்கிய கண்டம்! வெளியான அதிர்ச்சி தகவல்

 

ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள சில பகுதிகள் இன்னும் பல ஆயிரம் கோடி வருடத்தில் பிரிந்து அங்குப் பெருங்கடல் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

’rifting’ எனப்படும் நில பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்டோனிக் தட்டுகள் (tectonic plate) ஆனது தான் நிலப்பகுதி. கடலுக்கு அடிப்பகுதியிலும் டெக்டோனிக் தட்டுகள் இருக்கிறது.

இந்த தட்டுகள் சிறிது நகர்வதினால் தான் நில அதிர்வுகள் ஏற்படுகிறது. இந்த தட்டுகள் உடைவதையே rifting என்று கூறுகின்றனர்.

இந்த நிகழ்வு நிலப்பகுதியில் மட்டுமின்றி கடல் பகுதியிலும் நிகழக்கூடும். IFL Science தகவலின் படி, ஆப்பிரிக்கா பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற சுமார் 138 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 30 ஆண்டுக் காலமாக இந்த நிகழ்வு அப்பகுதியில் நடைபெற்றுவருவதாகவும் கூறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top