இலங்கையில் மிக விரைவில் முன்னோடி பரீட்சார்த்த முயற்சியாக மிதக்கும் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இரத்தினபுரி மாவட்டத்தின் சந்திரிக்கா வெவ மற்றும் மொனராகலை மாவட்டத்தின் கிரிஹிப்பன் வெவ ஆகிய குளங்களின் நீர்ப்பரப்பில் மிதக்கும் மின்னுற்பத்தி தட்டுகள் பொருத்தப்படவுள்ளன.
குறித்த பரீட்சார்த்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் இலங்கையின் முக்கிய நீர்நிலைகளில் மிதக்கும் மின்னுற்பத்தி தட்டுகளை பொருத்தி சூரிய ஔி மின்னுற்பத்திக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.