ஈக்வடாரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஈக்வடாரும் ஒன்று. அந்நாட்டின் கடற்கரை மாகாணமான கயாஸ் மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த மாகாணத்தின் பலோ நகரில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தன.
இந்த நிலநடுக்கத்தால் முதற்கட்டமாக 4 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 12 அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை மீட்கும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.