உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது
உக்ரைன் – ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது.
இந்த சூழலில், உக்ரைனுக்கு ஆதரவாக புதிய ராணுவ உதவிப் பொதியை இன்று அறிவிக்கும் என வெள்ளை மாளிகை ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது