News

உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்ட இலங்கையர்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் (நோய் எதிர்ப்பு நிபுணர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஐவர் பிரித்தானிய பிரஜைகள் என்பதுடன் அவர்களில் இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.

பிரிட்டிஷ் சொசைட்டி ஆஃப் இம்யூனாலஜிஸ்டுகளால் உலகின் ஆறு இளம் விஞ்ஞானிகளில். சந்திம ஜீவந்தர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நோயெதிர்ப்பு அறிவியலின் எதிர்காலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட விஞ்ஞானிகளை அங்கீகரிப்பதற்காக நடைபெறும் நோய்த்தடுப்பு விருது வழங்கும் விழாவில். ஜீவந்தர இந்த விருதைப் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்யூனாலஜி விருதுகள் என்பது உலகப் புகழ்பெற்ற மருத்துவ விருது வழங்கும் விழாவாகும், மேலும் உலகம் முழுவதிலுமிருந்து முப்பத்திரண்டு விஞ்ஞானிகள் விருதுகளைப் பெற ஆறு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விருது வழங்கும் விழா லண்டனில் ஏப்ரல் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. பேராசிரியர் சந்திம ஜீவந்தர இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பாக பல முன்னோடி விசாரணைகளை நடத்தி பல புதிய தகவல்களை வெளிக்கொண்டுவந்த விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top